தனுஷ் வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யாவின் ’பொம்மை’ ஃபர்ஸ்ட் லுக்... பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் ஏமாற்றம்

தனுஷ் வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யாவின் ’பொம்மை’ ஃபர்ஸ்ட் லுக்... பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் ஏமாற்றம்
பொம்மை பட ஃபர்ஸ்ட் லுக்
  • Share this:
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான மான்ஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அந்தப் படத்தை அடுத்து அவர் நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படமும் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்துக்கு பொம்மை என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கான ஃபர்ஸ்ட் லுக்கையும் நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதில் பொம்மையுடன் போஸ் கொடுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

மான்ஸ்டர் படத்தை அடுத்து பொம்மை படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். அதனால் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அவரும் இருப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அதற்கு பதிலாக பொம்மை மட்டுமே இடம்பெற்றுள்ளது.பிரியா பவானி சங்கரின் பிறந்தநாளான இன்று வெளியான பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

மேலும் பார்க்க: கலாபவன் மணியின் மரணத்துக்கு காரணம் என்ன? சிபிஐ அறிக்கை தாக்கல்
First published: December 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading