நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
விஜய்
  • Share this:
நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று இரவு காவல்துறை உதவி எண் 100-க்கு அழைத்த ஒரு மர்ம நபர் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீடு மற்றும் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் விஜய் வீட்டிற்கு சென்ற போலீசார் சோதனை நடத்திய போது அது புரளி எனத் தெரிய வந்தது.மேலும் படிக்க...

கணக்குகளை சமர்பிக்கத் தயார்.. நடிகர் விஷாலுக்கு பெண் ஊழியர் சவால்..

வெடிகுண்டு வைத்திருப்பதாக ஃபோன் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என போலீசார் தேடிய நிலையில், அவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading