முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / “அமிதாப் பச்சன் வீட்டில் வெடிகுண்டு..” போலீசாருக்கு தொலைபேசி மூலம் வந்த அதிர்ச்சி தகவல்!

“அமிதாப் பச்சன் வீட்டில் வெடிகுண்டு..” போலீசாருக்கு தொலைபேசி மூலம் வந்த அதிர்ச்சி தகவல்!

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

தொலைபேசி அழைப்பில், 25 பேர் ஆயுதங்களுடன் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வந்ததாகவும் கூறியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா அருகே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நாக்பூர் போலீசாருக்கு தொலைபேசியில் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து நாக்பூர் போலீசார் உடனடியாக மும்பை காவல்துறையினரை எச்சரித்தனர், மும்பை போலீசார் வெடிகுண்டு குழுவுடன் சென்று அமிதாப் பச்சன் வீட்டை சோதனை செய்தனர். ஆனால் தேடுதல் வேட்டையில் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் அந்த தொலைபேசி அழைப்பில், 25 பேர் ஆயுதங்களுடன் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வந்ததாகவும் கூறியுள்ளனர். அமிதாப் பச்சன் மட்டுமின்றி நடிகர் தர்மேந்திரா வீட்டிலும் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து இரண்டு நடிகர்களின் வடு உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சோதனையில் வெடிகுண்டுவில்லை. அந்த அழைப்பு போலியானது எனவும் உறுதியானது.

First published:

Tags: Amitabh Bachchan, Bomb, Mumbai, Threat