நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... காவல்துறையினர் தீவிர விசாரணை

அஜித்

அஜித் வீட்டில் மோப்ப நாய் பாண்டியன் உடன் வெடிகுண்டு நிபுணர்கள் 4 பேர் சுமார் 1 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

 • Share this:
  நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

  தமிழகத்தில் முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடிகர் அஜித் திருவான்மியூரில் வசித்து வரும் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் தகவல் விடுத்துள்ளார்.

  இதையடுத்து காவல்துறை கட்டுப்பாடு அறை அதிகாரிகள் கொடுத்த தகவலை அடுத்து நடிகர் அஜித் வீட்டில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உடன் சோதனை நடத்தினர்.

  Also Read : மரகத நாணயம் இரண்டாம் பாகம் - இயக்குனரின் முக்கிய அறிவிப்பு!

  அஜித் வீட்டில் மோப்ப நாய் பாண்டியன் உடன் வெடிகுண்டு நிபுணர்கள் 4 பேர் சுமார் 1 மணி நேரம் சோதனைக்கு பிறகு வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் புரளி என்று அங்கிருந்து திரும்பி சென்றனர்.

  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது வழக்கமாக உள்ளது.
  Published by:Vijay R
  First published: