ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'வட இந்தியா - தென்னிந்தியா என சினிமாவை பிரிப்பதை விரும்பவில்லை' - இளம் நடிகர் டைகர் ஷெரோப் கருத்து

'வட இந்தியா - தென்னிந்தியா என சினிமாவை பிரிப்பதை விரும்பவில்லை' - இளம் நடிகர் டைகர் ஷெரோப் கருத்து

ஹீரோபேன்ட்டி 2 படத்தில் டைகர் ஷெரோப்

ஹீரோபேன்ட்டி 2 படத்தில் டைகர் ஷெரோப்

கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் இருந்து எந்தப் படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வட இந்தியா - தென்னிந்தியா என சினிமாவை பிரிப்பதை விரும்பவில்லை என்று பாலிவுட் இளம் நடிகர் டைகர் ஷெரோப் கூறியுள்ளார்.

  பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப். 2 படங்களின் வெற்றி இந்தியா முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ளன. தென்னிந்திய கலைஞர்களால் எடுக்கப்பட்ட இந்த படங்களுக்கு நாடு முழுவதும் குறிப்பாக இந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

  சினிமாவுக்கு மொழி, நாடு, நிலம் என்ற எல்லைகள் ஏதும் கிடையாது என்பதை நல்ல படங்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றன. இந்தியாவில் டாப் 4 வசூலை குவித்த படங்கள் என்று பார்க்கும்போது அதில் 3 படங்கள் தென்னிந்தியாவை சேர்ந்ததாக உள்ளது.

  இதையும் படிங்க - மைக்கை வீசிய பார்த்திபன், அதிர்ச்சியான ஏ.ஆர்.ரஹ்மான்... இரவின் நிழல் விழாவில் என்ன நடந்தது?

  கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் இருந்து எந்தப் படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. இந்திய சினிமா என்றாலே அது பாலிவுட்தான் என்ற மனப்போக்கு தற்போது மாறி வருகிறது.

  தென்னிந்தியாவில் இருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் படங்களை வட இந்திய மக்களும் அதிகம் விரும்புகின்றனர். இந்த நிலையில் இந்திய சினிமா குறித்து இந்தி இளம் நடிகர் டைகர் ஷெரோப் கருத்து கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

  தென்னிந்திய சினிமாக்களை பார்ப்பது நமக்கு உத்வேகத்தை அளிக்கிறது. அதே நேரம் சினிமாக்களை தென்னிந்தியா வட இந்தியா என பிரித்து பார்ப்பதை விரும்பவில்லை. என்னைப் பொருத்தவரையில் இந்திய சினிமா என்பதில்தான் அனைத்தும் அடங்கியுள்ளன. எனக்கு பிடித்தமான ஜேனர்களில் நல்ல படங்கள் தென்னிந்தியாவில் இருந்து வருகின்றன.

  இதையும் படிங்க - Vijay: தோல்வியை தழுவிய விஜய்யின் சுறா... வசூல் செய்தது எவ்வளவு தெரியுமா?

  அவற்றை படமாக்கும் விதம் என்னை மிகவும் ஈர்க்கிறது. இயக்குனர்கள் ஹீரோவுக்கு பில்ட் அப் செய்யும் விதம், அறிமுக காட்சிகள் என அனைத்தும் ரசிக்கும்படி இருக்கின்றன.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  டைகர் ஷெரோப் பாலிவுட் மூத்த நடிகர் ஜாக்கி ஷெரோபின் மகன் ஆவார். ஜாக்கி ஷெரோப் தமிழில் பிகில் படத்தில் வில்லனாக நடித்திருப்பார். ஆரண்யகாண்டம் படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.

  Published by:Musthak
  First published: