‘இந்தித் திரை உலகின் சிவாஜிகணேசன்.. திலீப்குமார் புகழ் நிலைத்து நிற்கும்!’ - வைகோ இரங்கல்

திலீப் குமார்- வைகோ

மாநிலங்கள் அவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தபோது, சந்தித்துப் பேசி இருக்கின்றேன். அவரது நடிப்பைப் பாராட்டி இருக்கின்றேன்.

  • Share this:
    பாலிவுட்டின் மூத்த நடிகர் திலீப் குமார் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 98. கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

    திலீப் குமாரின் உண்மையான பெயர் யூசுப் கான். இவர் முகலாய இ-அசாம், தேவதாஸ், ராம் அவுர் ஷியாம், அந்தாஸ், மதுமதி மற்றும் கங்கா ஜமுனா உள்ளிட்ட இந்திய சினிமாவின் மிகச் சிறந்த ஐகானிக் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் திலீப் குமார் மறைவுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கலில் ‘புகழ்பெற்ற இந்தி நடிகர் திலீப்குமார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.இயற்கையான நடிப்பால், இலட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றார். இந்தித் திரை உலகின் சிவாஜிகணேசன் எனப் போற்றப்பட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நல்ல மனிதர். நல்ல நடிகர். திரை உலகின் உயரிய, தாதா சாகேப் பால்கே மற்றும், பத்மவிபூசண் விருதுகளைப் பெற்றவர்.அவர் மாநிலங்கள் அவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தபோது, சந்தித்துப் பேசி இருக்கின்றேன். அவரது நடிப்பைப் பாராட்டி இருக்கின்றேன்.  நிறைவாழ்வு வாழ்ந்து, 98 வயதில் இயற்கை எய்தி இருக்கின்றார்.அவரது புகழ் நிலைத்து நிற்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: