மாஸ்டர் ரீமேக் - எஸ்கேப்பான சல்மான் கான்...!

சல்மான் கான் - விஜய்

முழுநேரம் குடியில் மூழ்கிய பேராசிரியர் வேடத்தில் விஜய் மாஸ்டரில் நடித்திருந்தார். கல்லூரியிலிருந்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு வரும் அவர், அங்கு நடைபெறும் கிரிமினல் நடவடிக்கைகளை வேரறுத்து, அதற்கு காரணமான வில்லனை பழிவாங்குவது கதை.

  • News18
  • Last Updated :
  • Share this:
விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அப்படம் மெகா ஹிட்டானது. இதன் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் மாஸ்டர் ரீமேக்கில் நடிப்பதில்லை என சல்மான் கான் முடிவு செய்துள்ளார்.

முழுநேரம் குடியில் மூழ்கிய பேராசிரியர் வேடத்தில் விஜய் மாஸ்டரில் நடித்திருந்தார். கல்லூரியிலிருந்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு வரும் அவர், அங்கு நடைபெறும் கிரிமினல் நடவடிக்கைகளை வேரறுத்து, அதற்கு காரணமான வில்லனை பழிவாங்குவது கதை. இதில் வில்லன் பவானியாக விஜய் சேதுபதி அசத்தியிருந்தார். விஜய்யின் மாஸ் இமேஜ் காரணமாக மாஸ்டர் ஓடியது. படத்தின் கதை, காட்சிகள் யூகிக்கக் கூடியதாகவே இருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கதையில் சொதப்புவதால் சல்மான் கானின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்த வருகின்றன. கடைசியாக வெளியான ராதே படம் யாரையும் திருப்தி செய்யவில்லை. சுல்தான், பஜ்ரங்கி பைஜான் போன்ற நல்ல கதைகளை தேடிக் கொண்டிருந்த சல்மானுக்கு மாஸ்டர் கதை திருப்தி அளிக்கவில்லை. அதனால், மாஸ்டர் ரீமேக்கில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளார்.

Also read... சீயான் 60 படத்தின் பெயர், ஃபர்ஸ்ட் லுக் வெளியானது...!

மாஸ்டர் விஜய்யின் மாஸ் மற்றும் விஜய் சேதுபதியின் கிளாஸ் நடிப்பால் ஓடிய படம். அதில் நடிக்காமல் தவிர்த்தது சல்மான் கானின் புத்திசாலித்தனம்.
Published by:Vinothini Aandisamy
First published: