Home /News /entertainment /

பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு…

பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு…

பாலிவுட் முன்னணி நடிகர் அக்சய் குமார்

பாலிவுட் முன்னணி நடிகர் அக்சய் குமார்

கேன்ஸ் விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்தீக், நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா பாட்டியா, ஏ.ஆர்.ரகுமான், மாதவன், ஹினாகான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்சய் குமாருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அக்சய் குமார் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் அவர் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டிருந்த நிலையில் மீண்டும் அக்சய் குமாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நாளை மறுதினம் தொடங்கவுள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த திரைப்பட விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

கமல் ஹாசனின் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி, விஜய், சூர்யா? 

சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளது. இதில் இந்தியா சார்பாக அக்சய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ள நிலையில் கொரோனா காரணமாக இந்த விழாவை அக்சய் குமார் தவிர்த்துள்ளார்.



இந்திய கலைஞர்கள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் பங்கேற்கின்றனர். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

இதையும் படிங்க - தளபதி 66 அப்டேட் : விஜய்யின் அம்மா கேரக்டரில் நடிப்பவர் இவர்தானா?

இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்தீக், நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா பாட்டியா, ஏ.ஆர்.ரகுமான், மாதவன், ஹினாகான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மாதவன் நடித்துள்ள ராக்கெட்டி படமும் இந்த விழாவில் திரையிடப்படுகிறது. அக்சய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பிரித்விராஜ் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவற்பை பெற்று வருகிறது.
Published by:Musthak
First published:

Tags: Akshay Kumar

அடுத்த செய்தி