Home /News /entertainment /

கர்மா உங்களைப் பின்தொடரட்டும் - சுஷாந்த் சிங்கின் காதலி ரியாவை ஊடகவியலாளர்கள் சூழ்ந்ததற்கு திரைப்பிரபலங்கள் கண்டனம்

கர்மா உங்களைப் பின்தொடரட்டும் - சுஷாந்த் சிங்கின் காதலி ரியாவை ஊடகவியலாளர்கள் சூழ்ந்ததற்கு திரைப்பிரபலங்கள் கண்டனம்

நேற்று விசாரணைக்காக ரியா சக்ரபோர்த்தி NCB-க்கு வந்தார்.

நேற்று விசாரணைக்காக ரியா சக்ரபோர்த்தி NCB-க்கு வந்தார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) அலுவலகத்துக்கு வரும்போது ஊடகவியலாளர்கள் அவரை சூழந்துகொண்டதற்கு சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரின் காதலி ரியா சக்ரபோர்த்தி நேற்று மும்பையிலுள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (NCB) விசாரணைக்காக அழைக்கப்பட்டார். முன்னதாக ரியாவின் சகோதரர் ஷோவிக் சக்ரபோர்த்தியும், சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாமுவேல் மிரண்டாவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 9 வரை காவலில் வைக்கப்பட்டனர்.

    நேற்று ரியா விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) அலுவலகத்துக்கு வரும்போது ஊடகவியலாளர்களால் அவர் சூழப்பட்டதற்கு சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    நடிகை டாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில், குற்றம் நிரூபிக்கப்படும் முன்னரே இவர்கள் நீதியின் பெயரால் ஒரு மனிதரின் வாழ்வுரிமையைக்கூட பறிக்கிறார்கள் என்று கூறியுள்ள அவர், இவர்களின் ’கர்மா’ இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் முகவரியையும் தேடிப்பிடிக்க, தான் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.



    Also read: நடிகை கங்கனா ரனாவத்துக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு



    நடிகை ஹுமா குரைஷி, “நமக்கு என்னவாயிற்று? நாம் இப்படி நடந்துகொள்ளவே கூடாது. நிச்சயம் உண்மை வெளியே வரவேண்டும்; ஆனால் ஒரு பெண்ணாக இவருக்குரிய இடம் இவருக்கு வழங்கப்படவேண்டும், அடிப்படை மரியாதையும், சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதற்கான உரிமையும் இவருக்கு வழங்கப்படவேண்டும்” என்றார்.





    பத்திரிகையாளர் ரானா அய்யூப் தனது முகநூலில், நூற்றுக்கணக்கான ஆண்கள், கேமராக்கள் அவருக்கான வெளியில், அவரது உடலில் எல்லை மீறுகின்றன என்று கூறியிருப்பதோடு, ”இது நாளை நீங்களாகவும் இருக்கலாம். இதையெல்லாம் ஒரு வேடிக்கையாக எண்ணி நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். ரியா உங்களின் இந்த அறமற்ற உலகில் வில்லனாக உள்ளார்.

    பெண் உரிமைப் போராளியாக தன்னை முன்னிறுத்தும் ஒரு பிரதமர் உள்ள நாட்டில், ஒரு பெண் அத்துமீறப்பட்டு கொலை செய்யப்பட்டதற்காக குடிமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தும் ஒரு நாட்டில், உயிரோடு இருக்கும் இன்னொரு பெண்ணுக்குக் குரல் கொடுக்கமாட்டார்கள்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Rhea Chakraborty, Sushant Singh Rajput

    அடுத்த செய்தி