Home /News /entertainment /

ஷாரூக்கான் நடிக்கும் பதான் படத்தின் அப்டேட்… வைரலாகும் ட்விட்டர் பதிவு

ஷாரூக்கான் நடிக்கும் பதான் படத்தின் அப்டேட்… வைரலாகும் ட்விட்டர் பதிவு

ஷாரூக்கான்

ஷாரூக்கான்

Pathaan Movie : ஷாரூக்கான் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னையில் இருக்கிறார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் பதான் படத்துடைய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

    இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஷாரூக்கான் தற்போது ஜவான, பதான் மற்றும் டுங்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் முதல் படமாக பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வரவுள்ளது.

    ரூ. 250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் கதை எழுதி இயக்கி வருகிறார்.

    வெற்றிமாறனின் விடுதலை படத்தில் பிரபல இயக்குநர்?

    பதான் படத்தில் ஷாரூக்கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஷால் தத்லானி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

    கலவை விமர்சனங்களைப் பெறும் விஜய் தேவரகொண்டாவின் லைகர்…

    ஸ்பை த்ரில்லர் ஆக்சன் ஜேனரில் பதான் படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த ஜேனரில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் 3 படங்களை தயாரித்துள்ளனர். அந்த வகையில் பதான் படம் முந்தை படங்களையும் இணைத்து யூனிவர்ஸாக உருவாக்கப்படுகிறது.





    இந்நிலையில்,  ஜான் ஆப்ரகாமின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பதிவு வைரலாகியுள்ளது.

    திறமை மிக்க நடிகராக இருந்தும், ஜான் ஆபிரகாமுக்கு கடைசியாக அமைந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

    இதனால் பதான் படத்தின் வெளியீட்டை அவரது ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளார்கள். இன்னும் 5 மாதங்களில் படம் ரிலீஸாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பதான் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் காட்சிகளை ஷாரூக்கான் முடித்துள்ளார்.

    ஷாரூக்கான் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னையில் இருக்கிறார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Musthak
    First published:

    Tags: Shah rukh khan

    அடுத்த செய்தி