ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வசீகரத்தால் பெண்களை ஏமாற்றி கொன்ற கொடூரன்: ஓடிடியில் வெளியான நிஜ 'மன்மதனின் கதை

வசீகரத்தால் பெண்களை ஏமாற்றி கொன்ற கொடூரன்: ஓடிடியில் வெளியான நிஜ 'மன்மதனின் கதை

சார்லஸ் சோப்ராஜ்

சார்லஸ் சோப்ராஜ்

1970 காலத்தில் தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா பீச்சில் 6 பெண் சுற்றுலா பயணிகளுக்கு போதைப் பொருள் கொடுத்து கொலை செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

உலகையே உலுக்கிய படுகொலைகளை செய்த சர்வதேச குற்றவாளி சார்லஸ் சோப்ராஜ் தனது 78வது வயதில் நேபாள சிறையில் இருந்து விடுதலையாகும் செய்தி கடந்த 2 நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

பிகினி அணிந்த பெண்களைக் குறிவைத்து கொலை செய்ததற்காக பிகினி கொலைகாரன் என்று அழைக்கப்படுகிறார் சீரியல் கில்லரான சார்லஸ் சோப்ராஜ். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லஸ் சோப்ராஸ் ஒரு இந்திய வம்சாவளி என்று கூறப்படுகிறது. ஆரம்ப காலங்களில் பிரான்ஸில் சிறுசிறு குற்றங்களை செய்துவந்த சார்லஸ் சோப்ராஜ், 1970 -80 காலகட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொடூர கொலைகளை செய்திருக்கிறார்.

1970 காலத்தில் தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா பீச்சில் 6 பெண் சுற்றுலா பயணிகளுக்கு போதைப் பொருள் கொடுத்து கொலை செய்துள்ளார். அப்போது தான் தாய்லாந்து அரசு சார்லஸ்சுக்கு கைது வாரன்ட் பிறப்பித்தது.

இதையும் படிக்க | அன்பு என்ற சொல்லின் பொருள் விக்கி... உருக்கமான நயன்தாரா!

மேலும் இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் தொடர் கொலை குற்றங்களை செய்துவந்த இவர், வெவ்வேறு நாடுகளுக்கு தப்பியோடியுள்ளார். இந்தியாவில் செய்த குற்றங்களுக்காக 1980 ஆம் ஆண்டில் இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 1996 ஆம் ஆண்டுகளில் பல திட்டம் தீட்டி சிறையில் இருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் சரியாக 20 நாட்களுக்கு பிறகு கோவாவில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்தியா சிறையிலிருந்து சில ஆண்டுகளில் விடுதலையான இவர், நேபாள காவல்துறை கடந்த 2003 ஆம் ஆண்டில் நேபாள காவல்துறை கைது செய்தது. நேபாள நீதிமன்றம் சார்லஸுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இந்த நிலையில் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த சார்லஸ், தனது உடல்நலனைக் கருத்தில் கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்ற நதிமன்றம் விடுதலை செய்தது.

சார்லஸ் சோப்ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பிபிசி நெட்ஃபிளிக்ஸ் ஆகியவற்றில் டாக்குமென்ட்ரி தொடர்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2015 ஆம் ஆண்டு பாலிவுட்டில் மெயின் ஆர் சார்லஸ் என்ற படம் வெளியாகியுள்ளது. பிரவால் ராமன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரந்தீப் ஹூடா என்பவர் சார்லஸ் சோப்ராஜாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் சார்லஸால் ஏமாற்றப்பட்டவர்களின் பார்வையில் இப்படம் நகர்கிறது, சார்லஸ் சோப்ராஜ் எப்படி தனது வசீகரத்தால் பெண்களை ஏமாற்றி கொலை செய்கிறார் என்பது கதைக்களமாக கொண்டுள்ளது. இந்தப் படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியிருக்கிறது.

First published:

Tags: Bollywood, OTT Release