முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பா.ரஞ்சித்தை வெகுவாக பாராட்டிய பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்!

பா.ரஞ்சித்தை வெகுவாக பாராட்டிய பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்!

இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்குநர் பா.ரஞ்சித்

இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்குநர் பா.ரஞ்சித்

காதல் மற்றும் அதன் பின் நடக்கும் அரசியல் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து  எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்த அனுராக் காஷ்யப், இயக்குனர் பா.ரஞ்சித்தை கட்டியணைத்து பாராட்டியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை பார்த்த பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்குநர் பா.ரஞ்சித்தை வெகுவாக பாராட்டியுள்ளார். 

சார்பட்டா திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நடத்திரம் நகர்கிறது திரைப்படம் வெளியாகிறது. நாளை மறுநாள் வெளியாக உள்ள அந்த திரைப்படத்திற்கான புரமோஷன் வேலைகளில் பட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

அதற்காக பா.ரஞ்சித் உள்ளிட்ட பட குழுவினர் நேற்று மும்பை சென்றனர். அங்கு பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யபிற்கு நட்சத்திரம் நகர்கிறது படத்தை திரையிட்டனர்.

காதல் மற்றும் அதன் பின் நடக்கும் அரசியல் உள்ளிட்டவற்றை மையமாக வைத்து  எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்த அனுராக் காஷ்யப், இயக்குனர் பா.ரஞ்சித்தை கட்டியணைத்து பாராட்டியுள்ளார். இதனால் பட குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also read... செப்டம்பரில் தொடங்குகிறது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்!

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தை தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களிலும் வெற்றியடைய வேண்டும் என்று எதிர்பார்த்துள்ளார் பா.ரஞ்சித். இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director Anurag Kashyap, Entertainment, Pa. ranjith