சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் இல்லையே... வருத்தப்படும் பாலிவுட் இயக்குநர்...!

ஆரண்யகாண்டம் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ்.

news18
Updated: March 16, 2019, 1:24 PM IST
சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் இல்லையே... வருத்தப்படும் பாலிவுட் இயக்குநர்...!
விஜய்சேதுபதி
news18
Updated: March 16, 2019, 1:24 PM IST
சூப்பர் டீலக்ஸ் படத்தைப் பார்த்த பின்பு அந்தப் படத்தில் தான் இடம்பெறாதது வருத்தமளிப்பதாக பிரபல பாலிவுட் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஆரண்யகாண்டம் படத்தை அடுத்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தநிலையில் படத்தைப் பார்த்த பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், “சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்தேன். கொண்டாடுவதற்கு படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. படத்தைப் பார்த்த நான் அந்தப் படத்தில் இடம்பெறவில்லையே என்று வருத்தப்பட வைத்துள்ளது. குமாரராஜா பயமற்ற, பல தந்திரங்களைக் கொண்ட இயக்குநர். சில விஷயங்களை சொல்ல எனக்கு உரிமை இல்லை. ஆனால் வரும்போது வெறுமனே பார்க்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்

சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். முன்னதாக இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுத அனுராக் காஷ்யப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கும் இந்தப் படம் மார்ச் 29-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

பேட்ட படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியீடு - வீடியோ

First published: March 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...