நட்சத்திர ஜோடி ட்விட்டரில் சண்டை... ரசிகர்கள் குழப்பம்...!

ஜெனிலியாவின் கனவர் ரித்தேஷ் தேஷ்முக் ட்விட்டரில் ஜெனிலியாவை கலாய்க்கும் விதமாக மீம் ஒன்றை பதிவிட்டார்.

நட்சத்திர ஜோடி ட்விட்டரில் சண்டை... ரசிகர்கள் குழப்பம்...!
ரித்தீஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா தேஷ்முக்
  • News18
  • Last Updated: September 24, 2019, 11:42 AM IST
  • Share this:
பாலிவுட் தம்பதிகளான ரித்தீஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா தேஷ்முக் ஆகியோர் ட்விட்டரில் மாறி மாறி மீம் மூலம் சண்டையிட்டுக் கொண்டனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்மானவர் நடிகை ஜெனிலியா. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ்  திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் இவர்.

பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி என தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.


சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் குறும்பு செய்யும் ஹாசினியாக நடித்து அனைத்து தரப்பு மக்களின் மனதையும் கவர்ந்தார் ஜெனிலியா.

Also see... மீண்டும் ஒரு கலக்கல் புகைப்படம்...! ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்த ரம்யா பாண்டியன்

தொடர்ந்து 30 படங்களுக்கு மேல் நடித்த ஜெனிலியா தனது காதலர் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத் துறையை விட்டுவிலகினார்.இந்நிலையில், ஜெனிலியாவின் கனவர் ரித்தேஷ் தேஷ்முக் ட்விட்டரில் ஜெனிலியாவை கலாய்க்கும் விதமாக மீம் ஒன்றை பதிவிட்டார். அதில், “கோபப்படும் பெண்ணின் பின்னால் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பார். ஆனால் அவனுக்கு ஏன் அந்த பெண் கோபப்படுகிறார் என்று தெரியாது” என அந்த மீம்மில் இருந்தது.இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜெனிலியா தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பதிவிட்டார். அதில், “நான் எப்போதும் என் கணவர் பேசுவதை கவனிக்க மாட்டேன். ஆனால் எப்போதாவது அதை கவனித்தால் அது கண்டிப்பாக தவறாகதான் இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.இவ்வாறு ட்விட்டரில் கணவன் மனைவி இருவரும் காமெடியாக சண்டையிட்டு கொள்வதைக் கண்ட ரசிகர்கள் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also see...

First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading