ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Preity Zinta: வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயான ப்ரீத்தி ஜிந்தா!

Preity Zinta: வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயான ப்ரீத்தி ஜிந்தா!

கணவருடன் ப்ரீத்தி ஜிந்தா

கணவருடன் ப்ரீத்தி ஜிந்தா

வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றிருக்கிறார் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

  இயக்குனர் மணிரத்னம் இயக்கிய தில் சே படத்தில், ஷாருக் கானுடன் நடித்திருந்தவர் நடிகை ப்ரீத்தி சிந்தா. அந்தப் படத்தில் ப்ரீத்தி நாயர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றிருந்தார். அந்தப் படம் தமிழில் ‘உயிரே’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரீச்சயமானார் ப்ரீத்தி. அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் நடித்தார்.

  பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தன் நீண்ட கால நண்பரான ஜீன் குட் இனாஃப் என்பவரை லாஸ் ஏஞ்சல்ஸில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட ப்ரீத்தி, சிறப்புத் தோற்றங்களில் மட்டும் நடித்தார்.

  இந்நிலையில் தற்போது ப்ரீத்தி சிந்தா மற்றும் ஜீன் குட் இனாஃப் தம்பதிக்கு இரட்டைய குழந்தை பிறந்துள்ளது. வாடகை தாயின் மூலம் இந்த குழந்தைகளை அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துக் கொள்ளும் விதமாக சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட ப்ரீத்தி, “அனைவருக்கும் வணக்கம், இன்று உங்கள் அனைவருடனும் அற்புதமான செய்தியைப் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

  எங்கள் இரட்டையர்களான ஜெய் ஜிந்தா குட் எனாஃப் மற்றும் கியா ஜிந்தா குட் எனாஃப் ஆகியோரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் ஜீனும் நானும் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். எங்கள் இதயங்கள் மிகவும் நன்றியுடனும், மிகுந்த அன்புடனும் நிரம்பியுள்ளன. எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய கட்டத்தில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்த நம்ப முடியாத பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் எங்கள் வாடகை தாயிற்கு மனமார்ந்த நன்றி. அன்புடன் - ஜீன், ப்ரீத்தி, ஜெய் & கியா" என்று தெரிவித்துள்ளார்.

  இதையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் ப்ரீத்தி சிந்தாவிற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Bollywood actress