• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’பத்மஸ்ரீ’ விருது வாங்கிய நடிகை கங்கனா ரனாவத்!

’பத்மஸ்ரீ’ விருது வாங்கிய நடிகை கங்கனா ரனாவத்!

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 10 பேருக்கு பத்மபூ‌ஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

  • Share this:
    நடிகை கங்கனா ரணாவத்துக்கு பத்ம ஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த சேவை மற்றும் சாதனைகளை செய்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் வருடந்தோறும் பத்ம விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களாக 119 பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

    இதில் 7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 10 பேருக்கு பத்மபூ‌ஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 29 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவர். இறந்துவிட்ட 16 பேருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைப்பெற்றது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர். இதில் இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதையடுத்து திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், ரசிகர்களும் கங்கனாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: