அஜித்தின் ‘வலிமை’ பட ஹீரோயின் அப்டேட்!

அஜித்தின் ‘வலிமை’ பட ஹீரோயின் அப்டேட்!
அஜித்
  • Share this:
அஜித்தின் ‘வலிமை’ படத்தில் பாலிவுட் ஹீரோயின் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து போனி கபூர், அஜித், எச்.வினோத் கூட்டணி வலிமை படத்திலும் தொடர்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் 13-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு துவங்க இருப்பதாக போனி கபூர் அறிவித்துள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாகவும், மற்றொரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் நயன் தாரா - போனி கபூரை சந்தித்தை அடுத்து அவர் இந்தப் படத்தில் நாயகியாக நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.


மேலும் படிக்க: இந்த நடிகருடன் தான் டேட்டிங் செய்யப் போகிறேன் - பிக்பாஸ் ரைஸா

அதேவேளையில் மற்றொரு பாலிவுட் நடிகையும் ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் சங்கர்ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்