பாலிவுட்டின் பிரபல நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் தனது இன்ஸ்டாகிராமில் உறுதி செய்துள்ளார்.
நடிகை ஆலியா பட், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்திருப்பதாக தெரிவித்திருந்தார். 28 வயதான ஆலியா பட் வியாழக்கிழமை இரவு பகிர்ந்த ஸ்டோரியில், "அனைவருக்கும் வணக்கம், நான் கோவிட் -19 க்கு நேர்மறையை சோதித்தேன். உடனடியாக என்னை வீட்டு தனிமைப்படுத்தலில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என் மருத்துவர்களின் ஆலோசனையின்படி அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்த அவர், அந்த பதிவில் சம்பந்தப்பட்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். "உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்திருந்தார். மும்பையில் சஞ்சய் லீலா பன்சாலியின் ’கங்குபாய் கத்தியாவாடி’ படப்பிடிப்பில் இருந்த அலியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் மாத தொடக்கத்தில், இயக்குநர் பன்சாலி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, சில வாரங்களில் குணமடைந்தார். பின்னர் ஆலியா பட்டின் காதலன், நடிகர் ரன்பீர் கபூருக்கும் கடந்த மாதம் கோவிட் -19 ஏற்பட்டது. இதையடுத்து தான் தனிமைப்பட்டிருப்பதாக ஆலியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்தார். சில நாட்கள் கழித்து செய்யப்பட்ட சோதனையில் அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. இந்நிலையில் சில வாரங்கள் கழித்து தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.