Abhilasha Patil: அக்‌ஷய் குமார் பட நடிகை கொரோனா தொற்றுக்கு பலி

அபிலாஷா பாட்டீல்

அக்‌ஷய்குமார் நடித்த குட் நியூஸ், பத்ரிநாத் கி துல்ஹானியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்

  • Share this:
    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்தி நடிகை உயிரிழந்திருக்கிறார்.

    இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பல அரசியல் மற்றும் திரைப் பிரபலங்களையும் நாம் இழந்து விட்டோம்.

    கடந்த முதல் அலையைப் போல் இல்லாமல், தொற்று இருப்பவர்கள் அனைவரும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தலை விரித்தாடுகிறது. பிரபலங்கள், தன்னார்வலர்கள் என தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

    கொரோனா தொற்றுக்கு இந்திய அளவில் பல பிரபலங்களை நாம் இழந்திருக்கிறோம். இந்நிலையில் தற்போது பிரபல இந்தி குணசித்திர நடிகை அபிலாஷா பட்டீல் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இவர், சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த சிச்சோரே, அக்‌ஷய்குமார் நடித்த குட் நியூஸ், பத்ரிநாத் கி துல்ஹானியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

    கொரோனாவுக்கு பிரபலங்கள் பலியாகி வருவது திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: