முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'ஒரு வரிக்கதை.. உடனே ஓகே' விஜய் 67 குறித்து பேசிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்!

'ஒரு வரிக்கதை.. உடனே ஓகே' விஜய் 67 குறித்து பேசிய பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67 படத்தில் நடிப்பது மகிழ்ச்சி என பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கூறியுள்ளார். விஜய்யின் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் கைகோக்கிறார். ‘விஜய் 67’ என அழைக்கப்படும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றி வரும் ‘விஜய் 67’ படத்தின் அதிகாரபூர்வ அப்டேட்டை நேற்று படக்குழு வெளியிட்டது. படத்தில் இடம்பெறும் நடிகர்கள் உள்ளிட்ட விபரங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தெரிவித்தது. அதன்படி அப்டேட்களை தற்போது வெளியிட்டு வருகிறது.

கடந்த ஜனவரி 2-ஆம் தேதி இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று விஜய் 67 படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளனர். இந்தப் பயணத்தில் நடிகர் விஜய் உடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் என படக்குழுவினர் அனைவரும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தளபதி 67 படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை நாளை தொடங்குகின்றனர்.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சஞ்சை தத் இந்த திரைப்படத்தை பற்றி கூறுகையில், தளபதி 67 படத்தின் ஒருவரி கதையை கேட்டவுடன்,  இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என நினைத்ததாகவும், இந்த திரைப்படத்தின் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார். இவரை தொடர்ந்து அடுத்த நடிகர்கள் குறித்த அறிவிப்பையும் படக் குழுவினர் விரைவில் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Also read... WATCH -'லவ் யூ தலைவா..' ஓடிவந்த ரசிகர்.. கண்டிப்புடன் அறிவுரை கூறிய ரஜினிகாந்த்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Lokesh Kanagaraj