Shankar: ஷங்கரின் பிரமாண்ட படத்தில் சல்மான் கான்?

Shankar: ஷங்கரின் பிரமாண்ட படத்தில் சல்மான் கான்?

சல்மான் கான் - ஷங்கர்

இயக்குநர் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    இயக்குநர் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் தொடங்கப்பட்ட இந்தியன் 2, திரைப்படம், விபத்து, லைகா நிறுவனத்துடனான பிரச்னை, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் அதன் படப்பிடிப்பு நடைபெறாமல் இருக்கிறது. இதனால் இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். அதே நேரத்தில் தேர்தலை முடித்த கையோடு கமல் ஹாசனும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விக்ரம் படத்தில் பிஸியாகி விட்டார்.

    இந்நிலையில் ஷங்கர் இயக்கும் புதிய படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவியும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் தயாராகுகிறது. அதனால் அந்தந்த மொழிகளில் உள்ள பிரபல நடிகர்களை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஷங்கர் முயற்சித்து வருகிறாராம். இதன் ஒரு பகுதியாக இந்தியில் முன்னணி நடிகராக திகழும் சல்மான் கானுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இறுதி முடிவு எட்டியதும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்கள் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: