Mayavan Reloaded: மாயவன் ரீலோடடில் முக்கியக் கதாபாத்திரத்தில் பாலிவு நடிகர்!

சந்தீப் கிஷன்

இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த வருட கோடையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

  • Share this:
    மாயவன் படத்தின் சீக்வெலை எடுப்பதாக அறிவித்திருக்கும் சி.வி.குமார், மாயவன் நாயகன் சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று, மாயவன் இரண்டாம் பாகத்தின் பெயரை வெளியிட்டார்.

    அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட பல வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தயாரித்தவர், திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார். இவர் இயக்குனரான முதல் படம் மாயவன். இதன் திரைக்கதையில் சூதுகவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி பங்களிப்பு செலுத்தியிருந்தார். சந்தீப் கிஷன் போலீஸ் அதிகாரியாக நடித்த இப்படத்தில், ஒரு உடம்பிலிருந்து இன்னொரு உடம்பிற்கு உயிர் மாறுவதை காட்டியிருந்தார்கள். பொதுவாக கடவுள், பூதம் என்று வேப்பிலையடிக்கும் கதையை அறிவியல்பூர்வமாக அணுகியிருந்தது மாயவன்.

    இதன் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் வசனங்களுடன் தயாராக இருப்பதாக சி.வி.குமார் கூறியுள்ளார். இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த வருட கோடையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். இதுவொரு சயின்ஸ் பிக்ஷன் என்பதால் அதிக கலை இயக்கமும், சிஜி வேலைகளும் தேவைப்படும் என்று கூறியிருப்பவர், மாயவனில் ஜாக்கி ஷெராஃப் முக்கிய வேடத்தில் நடித்தது போல், மாயவன் ரீலோடில் இந்தி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க இருப்பதாக கூறினார்.

    ஆனால் அந்த நடிகர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. மாயவனில் நடித்த சந்தீப் கிஷனே இதிலும் நாயகன். மாயவனில் வரும் பல்வேறு கதாபாத்திரங்களை மாயவன் ரீலோடிலும் வரும்படி கதை எழுதப்பட்டுள்ளது. சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: