Home /News /entertainment /

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்?

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்?

ஹ்ரித்திக் ரோஷன் - சபா ஆசாத்

ஹ்ரித்திக் ரோஷன் - சபா ஆசாத்

ஹிருத்திக் ரோஷன் மற்றும் சபா ஆசாத் சமீபத்தில் லண்டனுக்கு சென்று தங்கள் விடுமுறையைக் கழித்தனர்.

    நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சபா ஆசாத் ஆகியோரது திருமணம் குறித்த செய்தி தான் தற்போது பாலிவுட்டின் ஹாட் டாபிக்.

    பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், மனைவி சுசானே கானை விவாகரத்து செய்த பின்னர், நடிகை சபா ஆசாத் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. இந்த ஜோடி கடந்த சில மாதங்களாக ஒன்றாக வெளியில் சென்று வரும் படங்கள் இணையத்தில் வெளியாகிய வண்ணம் உள்ளன. கரண் ஜோஹரின் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒன்றாக கலந்துக் கொண்டதன் மூலம் அவர்கள் கிட்டத்தட்ட தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக்கியுள்ளனர்.

    சமீபத்தில், ஹ்ரித்திக் மற்றும் சபா விரைவில் திருமணம் செய்துக் கொண்டு தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும், IndiaToday.in-ன் அறிக்கையின்படி, அவர்கள் திருமணம் செய்துக் கொள்ள அவசரப்படவில்லை எனத் தெரிகிறது.

    முன்னணி மலையாள நடிகரை கரம் பிடிக்கும் நித்யா மேனன்?

    இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில், ”ஹ்ரித்திக் ரோஷனும், சபா ஆசாத்தும் மகிழ்ச்சியான உறவில் உள்ளனர். அவர்கள் ஒன்றாக அதிக நேரம் செலவிடுவதுடன் விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வருகிறார்கள். சுசானேவுடன் மிகவும் அன்பாகவும் நல்ல ரிலேஷன்ஷிப்பிலும் இருக்கிறார் சபா. மேலும் ஹ்ரித்திக்கின் குழந்தைகளுடனும் நெருக்கம் காட்டி வருகிறார். இருப்பினும், சபாவும், ஹ்ரித்திக்கும் திருமணம் செய்து கொள்ளும் அவசரத்தில் இல்லை. அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் ரிலேஷன்ஷிப்பை ரசித்து அனுபவிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள வேண்டுமா எனவும் யோசித்து வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருமணத்திற்கு செலவழித்ததை திரும்ப தரக்கோரி நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு நெட்ஃப்ளிக்ஸ் நோட்டீஸ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by Saba Azad (@sabazad)






    இதற்கிடையில், ஹிருத்திக் ரோஷன் மற்றும் சபா ஆசாத் சமீபத்தில் லண்டனுக்கு சென்று தங்கள் விடுமுறையைக் கழித்தனர். அங்குள்ள ஜாஸ் கிளப்பில் அவர்கள் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டிருந்தார் சபா. தவிர ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசானே கான், அர்ஸ்லான் கோனியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Bollywood

    அடுத்த செய்தி