Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்தியாவின் சிறந்த நடிகர் பகத் பாசிலுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் - பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா!

இந்தியாவின் சிறந்த நடிகர் பகத் பாசிலுடன் நடிக்க ஆசைப்படுகிறேன் - பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா!

பகத் பாசில் - ஆயுஷ்மான் குரானா

பகத் பாசில் - ஆயுஷ்மான் குரானா

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் ஃபஹத் பாசில் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிகர் ஃபகத் ஃபாசிலுடன் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

இந்தி சினிமாவில் சிறப்பான நடிப்பால் அடையாளம் காணப்பட்ட நடிகர் ஆயுஷ்மான் குரானா, தான் தென்னிந்தியத் திரையுலகில் பணியாற்ற வேண்டும் என விரும்புவதாகவும், குறிப்பாக ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு ஊடகத்துடனான உரையாடலில் இதனை வெளிப்படுத்தினார் குரானா.

தென்னிந்திய சினிமாவால் தான் அதிகம் ஈர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ‘வட இந்திய குடும்பத்தில் பிறந்த தென்னிந்தியர்’ போல் உணர்கிறேன் என்றும் குறிப்பிட்டார். அதோடு, தான் மலையாள சினிமாவின் மிகப்பெரிய ரசிகன் என்றும், ஃபஹத் பாசிலுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார். ஃபஹத் பாசிலை, ‘நாட்டின் மிகச்சிறந்த கண்டெண்ட் கிரியேட்டர்களில் ஒருவர்’ என்று குறிப்பிட்ட ஆயுஷ்மான் குரானா, அவர் தனக்கு மிகவும் உத்வேகம் அளிப்பதாக கூறினார். மேலும் தாங்கள் இணைந்து பணியாற்றினால் அது நிச்சயம் 'சூப்பர்' ஆக இருக்கும் என்றும் கூறினார்.

தென்னிந்திய திரையுலகில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று கூறிய அவர், "அவர்கள் தங்கள் பார்வையாளர்களை நன்கு அறிவார்கள், அதோடு அங்கு உணர்வுமிக்க தொழில் பாணி (ஒர்க்கிங் ஸ்டைல்) இருக்கிறது" என்றும் கூறினார்.

தனுஷ் பட இயக்குநரை ரகசியமாக திருமணம் செய்துக் கொண்ட தன்யா பாலகிருஷ்ணா?

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் ஃபஹத் பாசில் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறார். சமீபமாக அவர் நடித்த ‘விக்ரம்’, ‘தொண்டிமுதலும் ட்ரிக்சாக்ஷியும்’, ‘கும்பளங்கி நைட்ஸ்’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘டிரான்ஸ்’, ‘சி யு சூன்’, ‘ஜோஜி’ உள்ளிட்ட படங்கள் இந்தியா முழுவதும் உள்ள திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: