ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆன்டி இண்டியன் 2 தயார்... ப்ளூ சட்டை மாறன் தகவல்

ஆன்டி இண்டியன் 2 தயார்... ப்ளூ சட்டை மாறன் தகவல்

ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன்

ஆன்டி இண்டியனின் திரையரங்கு வசூல் மோசம். அதேநேரம், படத்தின் சேட்டிலைட் உரிமையை நல்ல விலைக்கு கேட்கிறார்கள், இந்தி, தெலுங்கு டப்பிங் உரிமைக்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் ப்ளூ சட்டை மாறன்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆபரேஷன் சக்சஸ் ஆனால் நோயாளி மரணம் என்ற கதையாக ஆன்டி இண்டியன் படத்தை திரையுலகினர் ஆகா ஓகோ என்று பாராட்டினர். பாப்புலர் பத்திரிகைகளும் மதிப்பெண்களை அள்ளிக் கொடுத்தனர். ஆனால், திரையரங்கில் படத்தைப் பார்க்கத்தான் கூட்டமில்லை. வெளியான வேகத்தில் திரையரங்குகளிலிருந்து வெளியேறியது ப்ளூ சட்டை மாறன் என்கிற இளமாறனின் படம்.

ஆன்டி இண்டியன் குறித்த கலந்துரையாடலில், திரையரங்கில் கூட்டமில்லை என்பதை இளமாறன் ஒத்துக் கொண்டார். அதேநேரம் சமூகவலைத்தளத்தில் படத்தை மோசமாக விமர்சனம் செய்ததாக குற்றச்சாட்டை முன் வைத்தார். சின்ன பட்ஜெட் படங்களை இப்படி விமர்சனம் செய்தால் எப்படி அவை ஓடும் என்ற அவரது கேள்வி நியாயமானது. இதனை முதலில் அவர் தான் தனது விமர்சனங்களில் கடைபிடிக்க வேண்டும்.

ஆன்டி இண்டியனின் திரையரங்கு வசூல் மோசம். அதேநேரம், படத்தின் சேட்டிலைட் உரிமையை நல்ல விலைக்கு கேட்கிறார்கள், இந்தி, தெலுங்கு டப்பிங் உரிமைக்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். ஆன்டி இண்டியன் படமே இந்திப் படமொன்றின் காப்பி எனச் சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, ஒரு பிணம்னு இருந்தா அதுல சாதி, மத அரசியல், இரண்டு பொண்டாட்டிங்கிற விஷயம் எல்லாம் வரத்தான் செய்யும். இது காப்பி கிடையாது. ஆன்டி இண்டியன் இரண்டாவது பாகத்துக்கான கதையை கூட வச்சிருக்கேன். அதுலயும் இந்த அரசியல் மதம் எல்லாம் இருக்கும் என்றார்.

மேலும் படிக்க - மாநாடு வெற்றி விழாவை புறக்கணித்த சிம்பு... என்ன தான் பிரச்னை?

ஆன்டி இண்டியனையே ரசிகர்கள் பார்க்கத் தயாராக இல்லை இதில் இரண்டாம் பாகமா? பயமுறுத்தாதீங்க பாட்ஷா.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Tamil Cinema