• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஏன் ஆன்டி இன்டியன் பெயர்? - ப்ளூ சட்டை மாறன் சொன்ன சுவாரஸ்ய விளக்கம்!

ஏன் ஆன்டி இன்டியன் பெயர்? - ப்ளூ சட்டை மாறன் சொன்ன சுவாரஸ்ய விளக்கம்!

ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன்

திரைவிமர்சனத்தில் இருந்த நாகரிக அணுகுமுறையை முற்றிலும் நீக்கி, புதியதொரு பாணியை அறிமுகப்படுத்தியவர் ப்ளூ சட்டை மாறன் என்று அறியப்படுகிற இளமாறன்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தனது படத்துக்கு ஏன் ஆன்டி இன்டியன் என பெயர் வைத்தார் என்பதற்கு நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார் ப்ளூ சட்டை மாறன். 

திரைவிமர்சனத்தில் இருந்த நாகரிக அணுகுமுறையை முற்றிலும் நீக்கி, புதியதொரு பாணியை அறிமுகப்படுத்தியவர் ப்ளூ சட்டை மாறன் என்று அறியப்படுகிற இளமாறன். இவர் முதன்முறையாக இருக்கியிருக்கும் படம் ஆன்டி இன்டியன். இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்று மறுக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்றுள்ளார்.

அதனை கொண்டாடும்விதமாகவும், சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாகவும் நேற்று அவரும் படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவாவும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது தணிக்கையுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவம், படத்தின் பெயர்க் காரணம் உள்ளிட்ட பல விஷயங்களை மாறன் பகிர்ந்து கொண்டார்.

படத்தை தணிக்கைக்குழுவுக்கு திரையிட்ட போது, பாராட்டுவார்கள் என்று மாறன் நினைத்திருக்கிறார். ஆனால், அவர்களோ, சான்றிதழே தர முடியாது என்றதும் அதிர்ச்சியாகியுள்ளார். சரி, படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பலாம் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

நடிகை கவுதமி படத்தைப் பார்ப்பார் என்றிருக்கிறார்கள். கடைசியில் பெங்களூருவைச் சேர்ந்த நாகபரணா என்பவர் தலைமையில் படத்தைப் பார்த்து, 38 இடங்களில் கத்திரி போட்டால்தான் படத்தை அனுமதிக்க முடியும் என்றிருக்கிறார்கள். அவர்கள் செய்வதை சொன்னால், படம் ப்ளாப்தான் என்று ட்ரிபியூனலுக்கு படத்தை அனுப்ப தீர்மானித்திருக்கிறார்.

அந்த நேரம்தான் மோடி அரசு அந்த அமைப்பையே கலைத்தது. கடைசியாக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பின்படி புதிய கமிட்டி அமைத்து, அவர்கள் படத்தைப் பார்த்து, 3 இடங்களில் மட்டும் சிறிய திருத்தங்கள் கூறியிருக்கிறார்கள். அப்படி 38 வெட்டுகள் பரிந்துரைக்கப்பட்ட படம் 3 சின்ன திருத்தங்களுடன் தணிக்கைச்சான்று பெற்றிருக்கிறது. வாழ்க நீதிமன்றம்.

படத்தின் பெயர் குறித்து கேட்டதற்கு, "நாடே கெட்டாலும் பரவாயில்ல, நாம நல்லாயிருக்கணும்னு நினைக்கிற சில சுயநல மனிதர்கள் இருக்காங்கயில்ல, அவங்களை குறிக்கிற வகையில்தான் இந்த ஆன்டி இன்டியன்ங்கிற தலைப்பை வைத்தோம். ஒருவேளை இந்தத் தலைப்பை மறுத்தால், கேணப்பையன் ஊருல கிறுக்குப்பையன் நாட்டாமைன்னு பெயர் வைக்கலாம்னு முடிவு செஞ்சிருந்தோம்" என்றார்

இத்தனைக்குப் பிறகும் சென்சார் போர்டை மாறன் முழுமையாக நிராகரிக்கவில்லை. ஆண்ட்ராய்ட் போனில் சின்னப் பசங்களே இன்னைக்கு படம் எடுக்கிறாங்க. அந்த வளர்ச்சிக்கேற்ப விதிகளையும் மாற்றணும் என்கிறார்

Also read... சிவகார்த்திகேயனின் சிங்கப்பாதை படத்தின் புதிய அப்டேட்...!

"இந்தப் படத்துக்காக எனக்கு யாரும் மிரட்டல் விடவில்லை. ஆனால், இந்தப் படம் வரக்கூடாதுன்னு பலபேர் விரும்பினாங்க. படத்துக்கு சான்றிதழ் கிடைக்கவில்லைன்னு தெரிஞ்சதும் பார்ட்டி வச்சு கொண்டாடிய தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்" என்றார். சரி, இந்தப் படம் எப்படி இருக்கும்?

"படம் புதுசா இருக்கே, எவன்டா அவன் இப்படிப் போட்டு அடிச்சிருக்கான்னு எண்ணம் வரும். ஆனா, படம் முடியறப்போ நீங்க அப்படி நினைக்க மாட்டீங்க" என்றார். இந்தப் படத்துக்கு மாறனே இசையமைத்துள்ளார். நாம செலவு பண்ணி அடுத்தவங்களை இசையமைக்க வைத்து ஏன் படத்தை கெடுத்துக்கணும், அதுக்கு நாமே இசையமைச்சு கெடுத்திடுவோம்னு இசையமைச்சேன் என்றார் ஜாலியாக.

ஆன்டி இன்டியன் சர்ச்சைகளின் கூடாரமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: