Home /News /entertainment /

அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்ட ப்ளூ சட்டை மாறன்?

அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்ட ப்ளூ சட்டை மாறன்?

ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன்

பிவிஆர் தியேட்டருக்கு ப்ளூ சட்டை மாறன் வந்தபோது அவர் அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

    அஜித் ரசிகர்களால் பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தாக்கப்பட்டதாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் அவற்றை கடுமையாக விமர்சிப்பவர் 'தமிழ் டாக்கீஸ்' ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். இவர் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் இணையத்தில் அஜித் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டத் தொடங்கினர்.

    இந்நிலையில் சென்னையில் இருக்கும் பிவிஆர் தியேட்டருக்கு ப்ளூ சட்டை மாறன் வந்தபோது அவர் அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனை மறுத்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், ஏன் மறைந்திருந்து போட்டோ எடுத்தீங்க எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அடேங்கப்பா... பென்ஸ் காரை பரிசளித்த ஆல்யா மானசா சஞ்சீவ் ஜோடி - யாருக்குன்னு பாருங்க!



    தமிழ் சினிமாவில் மற்றொரு ஜோடி... பிரபல நடிகரை மணக்கும் நிக்கி கல்ராணி?

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், ”PVR-ல என்னடா ஆகும்? தியேட்டர்னா நாலு பேர் பாக்க வருவாங்க. முடிஞ்சதும் வெளிய போவாங்க. அதை மறைஞ்சி நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேர்ல வந்து எடுத்து தொலைய வேண்டியது தான? இதை ஷேர் பண்ணுற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ... வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ajith, Valimai

    அடுத்த செய்தி