ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மழையால் தள்ளிப்போன ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன்

மழையால் தள்ளிப்போன ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன்

ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கன மழை பொழிந்து வருவதால் இந்த முடிவை எடுத்ததாக மாறன் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ப்ளூ சட்டை மாறன் என்கிற இளமாறனின் ஆன்டி இண்டியன் திரைப்படம் கனமழை காரணமாக ஒருவாரம் தள்ளிப்போயுள்ளது.

திரைப்படங்களை எந்த கருணையும் இல்லாமல் விமர்சிக்கிறவர் ப்ளூ சட்டை மாறன். அண்ணாத்த படத்தை இப்படி விமர்சித்ததற்காக ரஜினி ரசிகர்கள் அவர் மீது கொலை வெறியில் உள்ளனர். ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லை. அஜித் உள்பட யார் படங்களையெல்லாம் கழுவி ஊற்றுகிறாரோ அவர்களின் ரசிகர்கள் எல்லாம் மாறன் மீது கோபத்தில் உள்ளனர். ஒரு படம் எடுத்துப் பாருடா என்று அவரை சவாலுக்கு இழுக்காதவர்கள் குறைவு.

அந்த சவாலை ஏற்று மாறன் எழுதி, இயக்கி, இசையமைத்து, நடித்திருக்கும் படம் தான் ஆன்டி இண்டியன். அடுத்தவன் என்னை என்ன கலாய்க்கிறது, நானே என்னை கலாய்ச்சுக்கிறேன் என்று படத்தில் வரும் தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு மாறனே மலர் தூவி மாலையிட்டு, அடுத்தவர் தன்னை கலாய்க்க முடியாதபடி செய்தார். டிசம்பர் 3-ம் தேதி இந்தப் படம் திரைக்கு வருவதாக அறிவித்திருந்தனர்.

தற்போது திடீரென பட வெளியீட்டை ஒருவாரம் தள்ளி வைத்துள்ளனர். டிசம்பர் 10-ஆம் தேதி தான் படம் திரைக்கு வருமாம். சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கன மழை பொழிந்து வருவதால் இந்த முடிவை எடுத்ததாக மாறன் கூறியுள்ளார்.

டிசம்பர் 9-ஆம் தேதி ஜீ.வி.பிரகாஷின் பேச்சிலர் திரைப்படமும், டிசம்பர் 10-ம் தேதி சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படமும் திரைக்கு வருகின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Tamil Cinema