Home /News /entertainment /

படத்தை விமர்சனம் செய்ய 3 லட்சம் கேட்ட ப்ளூ சட்டை மாறன்... ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்

படத்தை விமர்சனம் செய்ய 3 லட்சம் கேட்ட ப்ளூ சட்டை மாறன்... ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்

ப்ளூ சட்டை மாறன் - பார்த்திபன்

ப்ளூ சட்டை மாறன் - பார்த்திபன்

உலகம் முழுவதும் நல்ல சினிமாவை ரசிக்கிற எல்லா நடிகர்களது ரசிகர்களும் எனக்கு ரசிகர்களாக இருப்பார்கள்.

    படத்தை விமர்சனம் செய்ய ப்ளூ சட்டை மாறன் 3 லட்சம் பணம் கேட்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

    பார்த்திபன் இயக்கத்தில் நான் லீனியர் திரைக்கதை முறையில் உலகின் முதல் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படமா 'இரவின் நிழல்' கடந்த 15ஆம் தேதி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதற்கிடையே சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், இந்தப் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமல்ல என்றும் இரானியன் படமான ஃபிஷ் அண்ட் கேட் தான் உலகின் முதல் நான் லீனியர் படமென்றும் விமர்சித்திருந்தார்.

    இதனால் கோபமடைந்த பார்த்திபனின் ரசிகர்கள் சிலர், புதுச்சேரியில் ப்ளூ சட்டை மாறனின் உருவபொம்மையை சிலர் எரித்தனர். இதனை கண்டித்தும், ப்ளூ சட்டை மாறன் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டும் குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பார்த்திபன், படத்தை விமர்சனம் செய்ய ப்ளூ சட்டை மாறன் ரூ.3 லட்சம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன்?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மையை எரித்த ரசிகர்களை கண்டித்த பார்த்திபன், ”இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருக்கும் பிரச்சனைக்கான தன்னிலை விளக்கம்தான் இந்தப் பதிவு. என்னுடைய பரபரப்பான ரசிகர் மன்றங்களை ஆரம்பக்காலத்திலேயே பார்த்திபன் மனிதநேய மன்றம் என மாற்றினேன். அதன் பிறகு, என்னுடைய ரசிகர் மன்றங்களின் கூட்டம் குறைந்துவிட்டது. உலகம் முழுவதும் நல்ல சினிமாவை ரசிக்கிற எல்லா நடிகர்களது ரசிகர்களும் எனக்கு ரசிகர்களாக இருப்பார்கள். பார்த்திபன் மனிதநேய மன்றத்தின் பணி மனிதத்தோடு இயங்குவது மட்டுமே. அந்தக் கொடும்பாவி எரிப்பு சம்பவத்தில் பார்த்திபன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த யாரும் ஈடுபடவில்லை.

    திருமணத்திற்கு செலவழித்ததை திரும்ப தரக்கோரி நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு நெட்ஃப்ளிக்ஸ் நோட்டீஸ்

    நான் பாண்டிச்சேரிக்கு சென்ற பிறகுதான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியும். எனக்கு கொடும்பாவி எரிப்பில் எப்போதுமே உடன்பாடு கிடையாது. கொடும்பாவி எரிப்பை யார் செய்தாலும் தவறுதான். அது மனிதாபிமானமற்ற கொடுமையான செயல். இந்தச் செயலை செய்தவர்கள் பார்த்திபன் ரசிகர்கள் அல்ல. இப்படி ஒரு கூட்டம் எனக்கு இருந்தால் இப்படியெல்லாம் கஷ்டப்படாமல் கமர்ஷியல் ஆக்‌ஷன் படங்கள் பண்ணி இந்தக் கூட்டத்தைத் தக்க வைத்திருப்பேன். உருவபொம்மை எரிப்பது அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வளவு கஷ்டத்தைத் தரும் என்று எனக்குத் தெரியும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதனால் ப்ளூ சட்டை மாறனின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.



    தொடர்ந்து பேசிய அவர், “ரசிகர் மன்ற நிர்வாகியை, நீங்க பண்றது தப்பு தான்னு 10 பேருக்கு முன்னாடி மேடைல கண்டிக்கிறது அவர் மேல இருக்குற மரியாதையை குறைக்குற மாதிரி ஆகிடுமேன்னு, தனிப்பட்ட முறையில் அவரை கண்டிச்சேன். அதுக்கு அவர், சார் படத்தை விமர்சனம் பண்ண அவர் 3 லட்சம் கேட்டாரு, அதான் நான் அப்படி செஞ்சேன்னு சொன்னாரு” என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Parthiban

    அடுத்த செய்தி