முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஆன்டி இண்டியன் காப்பி அடிக்கப்பட்ட கதையா?

ஆன்டி இண்டியன் காப்பி அடிக்கப்பட்ட கதையா?

ஆன்டி இந்தியன்

ஆன்டி இந்தியன்

டேக் தமாசா டேக் திரைப்படத்தின் கதை ஆன்டி இண்டியனுடன் 80 சதவீதம் பொருந்திப் போகிறது.

  • Last Updated :

ப்ளூ சட்டை மாறன் எழுதி, இயக்கி, நடித்து, இசையமைத்திருக்கும் ஆன்டி இண்டியன் படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று ரசிகர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆன்டி இண்டின் காப்பி அடிக்கப்பட்ட கதை என குரல்கள் கேட்கின்றன.

மறைந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் ஞாநி சங்கரனின் 'யார்' குறும்படத்தை தழுவி ஆன்டி இண்டியன் படம் எடுக்கப்பட்டிருப்பதாக பலர் குற்றம்சாட்டியுள்ளனர். வேறு சிலர் 2014-ல் வெளிவந்த இந்திப் படம் டேக் தமாசா டேக் படத்தை தழுவி ஆன்டி இண்டியன் எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். இந்த சர்ச்சையை தொடங்கி வைத்தவர் உலக சினிமா பாஸ்கரன் என்பவர்.

இவர் இயக்கிய ஒரு படத்தின் விளம்பரத்துக்காக ப்ளூ சட்டை மாறனின் தமிழ் டாக்கீஸ் அதிக கட்டணம் கேட்டதாகக் கூறி ப்ளூ சட்டை மாறனை விமர்சித்திருந்தார். இப்போது அவர்தான் ஆன்டி இண்டியன் டேக் தமாசா டேக் படத்தின் காப்பி என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

பாஸ்கரன் சொல்வதில் உண்மை இருக்கவே செய்கிறது. இந்திப் படம் உண்மை நிகழ்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. அரசியல்வாதியின் பேனர் சரிந்து விழுந்து ஒருவன் இறந்து போகிறான். ஆன்டி இண்டியனில் வரும் மாறனின் பாட்ஷா கதாபாத்திரம் போன்று அவன் பிறப்பால் இந்து. ஆனால் முஸ்லீமாக மதம் மாறியவன். இப்போது பிரச்சனை பெரிதாக இந்து முறைப்படி எரிப்பதா இல்லை முஸ்லீம் மதப்படி புதைப்பதா என மதப்பிரச்சனையாகிறது.டேக் தமாசா டேக் திரைப்படத்தின் கதை ஆன்டி இண்டியனுடன் 80 சதவீதம் பொருந்திப் போகிறது. அதனால், இது காப்பி என்கிறார்கள். ப்ளூ சட்டை மாறன் தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Tamil Cinema