• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பேனருக்கு ரத்த அபிஷேகம் - ரஜினி மீது போலீசில் புகார்

பேனருக்கு ரத்த அபிஷேகம் - ரஜினி மீது போலீசில் புகார்

அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்த செயலை கண்டிக்காத ரஜினி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
    ஆடு பலி கொடுத்து ரஜினியின் அண்ணாத்த பேனருக்கு ரத்த அபிஷேகம் செய்த விஷயத்தில் ரஜினி மீது காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் மறு;றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இதனை கொண்டாடும்விதமாக ரஜினி ரசிகர்கள் சிலர், ஆடு ஒன்றை சாலையில் வைத்து பலியிட்டு, அதன் ரத்தத்தால் ரஜினியின் அண்ணாத்த பேனருக்கு ரத்த அபிஷேகம் செய்தனர். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது.

    இந்நிலையில் தமிழ்வேந்தன் என்ற வழக்கறிஞர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "சில தினங்களுக்கு முன் ரஜினியின் அண்ணாத்த படத்தின் போஸ்டர் வெளியானபோது அவரது ரசிகர்கள் அண்ணாத்த படத்தின் முன்பு ஒரு ஆட்டை கொடூரமாக பலி கொடுத்து, அந்த பேனருக்கு ரத்த அபிஷேகம் செய்துள்ளனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவம் பெண்கள், குழந்தைகள் செல்லும் நடுரோட்டில் நடைபெற்றுள்ளது.

    ஆனால், இது குறித்து ரஜினி இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. அவரது செயல்பாடு இதனை ஆதரிப்பது போல் உள்ளது. கோயில்கள், கறிக்கடைகளில் ஆடு வெட்டப்படுவதையே ஒதுக்குப்புறமாக வைத்து செய்து வருகிறார்கள். ஆனால், ஒரு நடிகரின் கட்அவுட்டுக்கு இப்படி நடுரோட்டில் ஆட்டை பலி கொடுத்தது கொடூரமானது. அதனால், இந்த செயலை கண்டிக்காத ரஜினி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் இந்த விவகாரத்தில் ரஜினி மீது காவல்துறையால் எவ்வித நடவடிக்கையும் சட்டப்படி எடுக்க முடியாது. அதேநேரம் போஸ்டருக்கு ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்கிறவர்களை தான் ரசிகர்களாக நாம் உருவாக்கியிருக்கிறோமா என்று அவர் சிந்திப்பது அவசியம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: