தமிழகத்தில் நிச்சயமாக பாஜக ஆட்சி அமையும் - நமீதா உறுதி..

நமீதா பத்திரிகையாளர் சந்திப்பு

தமிழகத்தில் நிச்சயமாக பாஜக ஆட்சி அமையும் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு முன்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட நமீதா, கடந்த ஆண்டு இறுதியில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பாஜகவில் சேர்ந்தார். அக்கட்சியில் அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் இன்று மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மீனவர் அணி சார்பாக ஐஸ் ஹவுஸ் பகுதியில் பொதுமக்களுக்கு 370 கிலோ மீன் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நமீதா கலந்து கொண்டார். பின்னர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர் கோகுல் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

  கேள்வி: 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

  நமீதா பதில்: தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் மோடி. 10 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளார். 20 ஆயிரம் கோடி மீனவர்களுக்கு ஓதுக்கியுள்ளார்.  கேள்வி: பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதா?

  நமீதா பதில்: நிச்சயமாக பாஜக ஆட்சி அமையும்.

  கேள்வி: உங்களுடைய தேர்தல் பணி எப்படி இருக்கும்? நீங்கள் போட்டியிட வாய்ப்பு உள்ளதா?

  நமீதா பதில்: நிறைய சர்ப்ரைஸ் நடக்கும். தேர்தல் பணிகளை பற்றி இப்போது வெளியில் சொல்லக் கூடாது.  கேள்வி: நீட் தேர்வு தொடர்பாக 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்களே?

  நமீதா பதில்: மாணவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. தற்கொலை செய்வதற்கு முன் குடும்பத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். மாணவர்கள் தற்கொலையில் இருந்து விடுபட தியானம் செய்ய வேண்டும்.

  கேள்வி: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளதே?

  நமீதா பதில்: அதைப்பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை

  கேள்வி: நடிகர் சூர்யா , நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளாரே?

  நமீதா பதில்: இந்தக் கேள்வி வேண்டாம்.
  Published by:Sheik Hanifah
  First published: