முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / என்னது ?! நடிகர் விஜய் பிரதமர் மோடிக்கு சப்போர்ட் பண்ணாரா?... அமர் பிரசாத் ரெட்டி ட்விட்டால் ஷாக்கான ரசிகர்கள்..!

என்னது ?! நடிகர் விஜய் பிரதமர் மோடிக்கு சப்போர்ட் பண்ணாரா?... அமர் பிரசாத் ரெட்டி ட்விட்டால் ஷாக்கான ரசிகர்கள்..!

விஜய் - நரேந்திர மோடி - அமர் பிரசாத் ரெட்டி

விஜய் - நரேந்திர மோடி - அமர் பிரசாத் ரெட்டி

பொதுவாக பாஜக தலைவர்களுக்கு விஜய்யை பிடிக்காது என்று ஒரு தகவல் இருக்கிறது.அது முற்றிலும் தவறு. நாங்கள் நடிகர் விஜய்யை நேசிக்கிறோம் என அமர்பிரசாத் ரெட்டி ட்வீட்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். லியோ வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்த 90 நாட்களில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துவருகிறார். மனோஜ் பரமஹம்சா ஏற்கனவே நண்பன், பீஸ்ட் படங்களில் விஜய்யுடன் பணிபுரிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவலன், தலைவா, கத்தி, மெர்சல் என விஜய் படங்கள் வெளியாகும்போதெல்லாம் அரசியல் ரீதியான எதிர்ப்புகளை சந்தித்தன என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில படங்கள் மட்டும்தான் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக வெளியாகின.

இந்த நிலையில் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விஜய் இருவரும் கைகுலுக்கும் போட்டோவை பகிர்ந்து, ''பொதுவாக பாஜக தலைவர்களுக்கு விஜய்யை பிடிக்காது என்று ஒரு தகவல் இருக்கிறது.

அது முற்றிலும் தவறு. நாங்கள் நடிகர் விஜய்யை நேசிக்கிறோம். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை வெளிப்படையாக  ஆதரித்தவர்களில் விஜய்யும் ஒருவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை ஆதரிப்பதாக எந்த இடத்திலும் விஜய் தெரிவிக்காத நிலையில், அமர் பிரசாத் ரெட்டி கூறிய தகவல் ரசிகர்களிடையே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Actor Thalapathy Vijay, BJP, PM Narendra Modi