நயன்தாராவை பாஜகவுக்கு அழைத்த அரசியல் பிரபலம்!

நயன்தாராவை பாஜகவுக்கு அழைத்த அரசியல் பிரபலம்!
நயன்தாரா
  • News18 Tamil
  • Last Updated: December 12, 2019, 10:06 AM IST
  • Share this:
பகவதி அம்மன் கோயில் நடிகை நயன்தாராவை சந்தித்த நரசிம்மன் அவரை பாஜகவில் இணையுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

தர்பார் படத்துக்குப் பின் ஆர்.ஜே.பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தப் படத்துக்காக கன்னியாகுமரி அருகேயுள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்ற நயன்தாரா அங்கு சிறப்பி பிரார்த்தனை செய்தார்.

இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் நயன்தாரா பிரார்த்தனை செய்துள்ளார். அப்போது முன்னாள் எம்.பி.யும் பாஜக தலைவர்களுள் ஒருவருமான நரசிம்மனும் கோயிலுக்கு வருகை தந்துள்ளார். எதேச்சையாக இருவரும் சந்தித்துக் கொள்ள நயன்தாராவிடம் பாஜகவில் இணையுமாறு கோரிக்கை விடுத்துள்ளார் நரசிம்மன். ஆனால் புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து அங்கிருந்து விடைபெற்றுள்ளார் நயன்தாரா.
சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்தை பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடிகை நமீதா, ராதாரவி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ரஜினியுடன் நடிக்க மணிரத்னம் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்!
First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்