விஜய் எங்களுக்கு ஒரு ஆளே இல்லை: போராட்டம் குறித்து வாய் திறந்த எச்.ராஜா

விஜய் எங்களுக்கு ஒரு ஆளே இல்லை: போராட்டம் குறித்து வாய் திறந்த எச்.ராஜா
விஜய் - எச்.ராஜா
  • Share this:
விஜய்க்கு எதிராகப் போராட்டம் நடத்தவில்லை; நெய்வேலி சுரங்கத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கே எதிர்ப்பு தெரிவித்தோம் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, ’திமுகவும் அதன் இலவச இணைப்பு கட்சிகள் தொடர்ந்து மத ரீதியான தாக்குதலை திட்டமிட்டு பரப்புவதால் பல்வேறு நிகழ்வுகள் நடக்கின்றது. பாதிரியார்களை நிர்பந்தப்படுத்தி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வாங்குகின்றனர்” என்றார்.

மேலும் சிவ வழிபாட்டை கேலி செய்த சீமான் பெருவுடையார் கோவிலுக்கு சென்றது ஏன்? என்று கேள்வி எழுப்பிய எச்.ராஜா, விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. அவர் எங்களுக்கு ஒரு ஆளே இல்லை. படப்பிடிப்பை நெய்வேலி சுரங்கத்தில் நடத்துவதற்கே எதிர்ப்பு தெரிவித்தோம். விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதற்கு பாஜக அரசு காரணமல்ல. சினிமா உலகத்தில் கருப்பு பண முதலீடு அதிகரித்துள்ளது என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், ரஜினி குறித்து பேச தமிழருவி மணியன் யார்? சுயவிளம்பரத்துக்காக பேசிவரும் அவரது கருத்துக்கு நான் பதில் கூற விருமபவில்லை என்றார்.
First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading