பகத் பாசில் நடிப்பில் வெளிவந்துள்ள நிலை மறந்தவன் திரைப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள
பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா, நிலை மறந்தவன் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பகத் பாசில் நடிப்பில் 2020-ம் ஆண்டு ட்ரான்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இதனை மலையாளத்தின் முன்னணி சினிமா தயாரிப்பாளர் அன்வர் ரஷீத் இயக்கி தயாரித்திருந்தார். இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
மக்களின் கண்மூடித்தனமான நம்பிக்கையை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, பணம் சம்பாதிக்கும் போலி மத போதகர்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. சர்ச்சைக்குரிய கதை என்பதால் இந்த படத்திற்கு கேரளாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.
Kolai Official Motion Poster | இணையத்தில் வைரலாகும் விஜய் ஆண்டனி படத்தில் மோஷன் போஸ்டர் வீடியோ!
இப்படியான ஒரு படத்தை உருவாக்குவதற்கும் நடிப்பதற்கும் தைரியம் வேண்டும் என ஒரு தரப்பினர் இந்த படத்தின் குழுவினருக்கு பாராட்டு கூறியிருந்தார்கள்.
இந்நிலையில் ட்ரான்ஸ் திரைப்படம் நிலை மறந்தவன் என்ற பெயரில் தமிழில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை கன்னியாகுமரி, நாகர்கோவிலில் வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. சில இடங்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
நிலை மறந்தவன் படத்தின் மீதான எதிர்ப்புகளுக்கு எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காரைக்குடியில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நிலை மறந்தவன் படத்தை திரையிடக் கூடாது என்று உளவுத்துறை அதிகாரி ஒருவர் தியேட்டருக்கு போன் போட்டு மிரட்டியுள்ளார். கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இந்த படத்தை திரையிடக் கூடாதென போலீசார் மிரட்டல் விடுக்கின்றனர்.
ஷிவானி நாராயணன் பகிர்ந்த சன்டே புகைப்படம்... குவியும் லைக்குகள்!
உளவுத்துறை அவர்கள் வேலையை மட்டும் செய்ய வேண்டும். சினிமாவை நிறுத்துவது என்பது உளவுத்துறையின் வேலையா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.