“என் வாழ்க்கையை மாற்றினீர்கள்.. உங்களுக்கு நன்றி!” - சாவித்திரி பிறந்தநாளுக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து

மகாநதி / நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மகாநதி / நடிகையர் திலகம் படம் அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது.

news18
Updated: December 7, 2018, 10:05 AM IST
“என் வாழ்க்கையை மாற்றினீர்கள்.. உங்களுக்கு நன்றி!” - சாவித்திரி பிறந்தநாளுக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து
கீர்த்தி சுரேஷ்
news18
Updated: December 7, 2018, 10:05 AM IST
நடிகை சாவித்திரியின் பிறந்தநாளான நேற்று அவருக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நேற்று (டிசம்பர் 6) புகழ்பெற்ற நடிகை சாவித்திரி பிறந்த தினம். இவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவருடைய வாழ்க்கை வரலாறு படமான மகாநதி / நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மகாநதி / நடிகையர் திலகம் படம் அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அவரின் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினர். அவருக்கு நன்றி சொல்லும் விதமாக அவர் இப்பதிவை பதிவிட்டுள்ளார்.

நடிகையர் திலகம் பட போஸ்டர்


தனது ட்விட்டர் பக்கத்தில், “இது உங்களுக்காக, என்றும் எப்போதும் அனைவரின் நினைவிலும் இருக்கும் சகாப்தம் நீங்கள். நீங்கள் எங்களை தேர்ந்தெடுத்தீர்கள். உங்களுடைய அன்பும், ஆசியும் நாங்கள் போராடி இந்த இடத்திற்கு வர உறுதுணையாக இருந்தது. எங்களுக்கு கிடைத்த அனைத்திற்கும் நாங்கள் தகுதியானவர்கள்தான் என்பதை உணரவைத்தீர்கள். உங்களை மகிழ்ச்சிபடுத்திவிட்டோம் என நாங்கள் நம்புகிறோம். மகாநதி / நடிகையர் திலகம் படம் உங்களை திரும்பி கொண்டுவர நாங்கள் எடுத்த முயற்சி. உங்களுக்கான நியாயத்தை செய்ததாக நம்புகிறோம். எங்களால் முடிந்ததை செய்தோம். உங்களுக்கு நிகர் யாரும் இல்லை . நீங்கள் எங்களுடையன வாழ்க்கையை மாற்றினீர்கள், என்னுடைய வாழ்க்கையை மாற்றினீர்கள் உங்களுக்கு நன்றி” என்று பதிவிவிட்டுள்ளார்.
Loading...
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...