பல கோடி மோசடி வழக்கில் கார்த்தி பட நடிகை கைது

லீனா மரியா பால்

நடிப்பை விட தனது பார்ட்னர் சுகேஷ் சந்திரசேகருடன் பல மோசடி வழக்குகளில் ஈடுபட்ட பிறகே வெளிச்சத்திற்கு வந்தார்.

 • Share this:
  மோசடி வழக்கில் பிரியாணி பட நடிகை லீனா மரியா பால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனா மரியா பால். இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், கார்த்தி நடித்த ‘பிரியாணி’ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லீனா.

  பெங்களூருவில் பல் மருத்துவராகப் பயிற்சி பெற்ற லீனா, பின்னாளில் சினிமா மீதான ஆசையால், திரைத்துறையில் நுழைந்தார். இருப்பினும், தன்னுடைய வேலையை விட, அவர் தனது பார்ட்னர் சுகேஷ் சந்திரசேகருடன் பல மோசடி வழக்குகளில் ஈடுபட்ட பிறகே வெளிச்சத்திற்கு வந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தற்போது கொச்சியில் வசித்து வரும் லீனா, அங்கு பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் முன்னாள் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் விளம்பரதாரர் ஷிவந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் இருந்து பணம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ரூ.200 கோடி கொள்ளை மோசடியில் சுகேஷ் சந்திர சேகர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரின் காதலியான லீனாவை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  நேற்று கைது செய்யப்பட்ட லீனா மரியா பாலை, டெல்லி கோர்ட்டு 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. அதோடு 5 நாட்கள் காவல்துறை விசாரணையில் எடுத்து விசாரிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

  தவிர, இரட்டை இலை சின்னம் வாங்கித் தருவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: