நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

ஜேபி - தி லெஜெண்ட் ஆப் சந்திரபாபு என்ற பெயரில் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது.

நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!
நடிகர் சந்திரபாபு
  • News18
  • Last Updated: November 28, 2018, 11:21 AM IST
  • Share this:
மறைந்த நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது.

இது குறித்து படக்குழுவினர் வெலியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,  “தமிழ்த் திரையுலகில் 1950 முதல் 1970 வரை நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமல்ல குறிப்பிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் சந்திரபாபு.

ஜேபி - தி லெஜெண்ட் ஆப் சந்திரபாபு என்ற பெயரில் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் புனைவாக கே.ராஜேஸ்வர் எழுதிய நாவல் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. அந்தப் படத்திற்கு “ஜேபி: தி லெஜெண்ட் ஆப் சந்திரபாபு” என பெயர் வைத்துள்ளனர்.


சந்திரபாபு கேரக்டரில் நடிக்க பிரபல் முன்னணி நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் மறும் காலம் சென்ற பிரபல அரசியல் கட்சி தலைவர்களான காமராஜ், வ.உ.சி வேடங்களில் நடிக்க நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்திய - ரஷ்ய கூட்டுத் தயாரிப்பு நிறுவனமான ருரோ இண்டர்நேஷனல் சார்பில் ரஷ்யா தங்கப்பன், கே.ராஜேஷ்வர், ஆர்.வி.சுவாமிநாதன் மூவருடன் ஒரு பிரபல திரைப்பட நிறுவனம் ஒன்றிற்காக நிர்வாக தயாரிப்பின் பொறுப்பை குட்டி பத்மினி ஏற்றுள்ளார்.

அமரன், இதயத்தாமரை, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவரும் சீவலப்பேரிபாண்டி படத்தின் திரைக்கதை வசனம் எழுதிய கே.ராஜேஷ்வர் கதை திரைக்கதை வசனம் எழுதி “ஜேபி: தி லெஜெண்ட் ஆப் சந்திரபாபு படத்தை இயக்குகிறார்”.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வேகமாக சென்ற பஸ்சில் இருந்து தவறி விழுந்த பயணி உயிரிழப்பு - வீடியோ

First published: November 28, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading