ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஒரு பெண்ணை எப்படி ஸ்பெஷலாக உணர வைப்பது என உங்களுக்குத் தெரியும் - கமல் ஹாசனுக்கு பிந்து மாதவி வாழ்த்து

ஒரு பெண்ணை எப்படி ஸ்பெஷலாக உணர வைப்பது என உங்களுக்குத் தெரியும் - கமல் ஹாசனுக்கு பிந்து மாதவி வாழ்த்து

கமல் ஹாசன் - பிந்து மாதவி

கமல் ஹாசன் - பிந்து மாதவி

நேற்று கமல் ஹாசன் தனது 68-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு அரசியல் மற்றும் திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை பிந்து மாதவி, உலக நாயகன் கமல் ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.  

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் நடிகர் கமல் ஹாசன். ஒரு நடிகர் பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கலாம், ஆனால் கமல்ஹாசனைப் போல பன்முகத் திறமை கொண்டவராக இருப்பது அரிது. நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் மற்றும் அரசியல்வாதி என பல இறக்கைகள் கொண்ட மூத்த நடிகர்.

  பார்வையாளர்களை கவர்வதில் இருந்து விமர்சகர்களை கவர்வது வரை அவரால் செய்ய முடியாததென்று ஒன்றுமில்லை. 1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியிலும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பாத நடிகர் கமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்துள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Bindu Madhavi🦋 (@bindu_madhavii)  பிறந்தநாளை ஒருநாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை - கமல் ஹாசன்

  நேற்று அவர் தனது 68-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு அரசியல் மற்றும் திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் கமல் ஹாசனின் பர்த்டே பார்ட்டியில் கலந்துக் கொண்டு, அவருடன் நடனமாடிய படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்த பிந்து மாதவி, “மினுமினுப்பும் கவர்ச்சியும் நிறைந்த இந்த உலகில், சுற்றிலும் ஆண்கள் இருக்கிறார்கள். ஐயா நீங்கள் ஒரு உண்மையான ஜென்டில்மேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார். ஒரு பெண்ணை எப்படி ஸ்பெஷலாக உணர வைப்பது என்பது உங்களுக்குத் தெரியும்” எனத் தெரிவித்திருந்தார்.

  அந்தப் படம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actress bindu madhavi, Kamal Haasan