விஜய் சேதுபதியுடன் கரம் கோர்க்கும் நடிகர் சிம்பு..!

விஜய் சேதுபதியுடன் கரம் கோர்க்கும் நடிகர் சிம்பு..!
சிம்பு - விஜய் சேதுபதி
  • Share this:
மாஸ்டர் படப்பிடிப்பை முடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது தனது அடுத்த படத்தில் பிஸியாகியுள்ளார். அதேபோல் நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் இருவரும் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் புதிய படத்தின் டைட்டிலை நாளை மாலை 5 மணிக்கு அறிவிக்கின்றனர். இதை படக்குழு அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர், ஹரிஷ் கல்யாணின் இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் என்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது 'தேர்ட் ஐ என்டர்டெயின்மெண்ட்' (Third Eye Entertainment) தயாரிப்பில் புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நடிகை பிந்துமாதவி ஹீரோயினாக நடித்து வருகிறார்.


தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் சிம்பு, விஜய் சேதுபதி இணைந்து நாளை மாலை 5 மணிக்கு டைட்டிலை அறிவிக்க இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் படிக்க: நடிகர் விஜய்யிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் - பாலிவுட் ஸ்டார் ரித்திக் ரோஷன்
First published: March 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading