நடிகர் விஷாலுடன் நிச்சயதார்த்தம் ஆன, நடிகை அனிஷா அல்லா ரெட்டியின் பிகினி படம், இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அனிஷா அல்லா ரெட்டி. இவரும் விஷாலும் காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணத்திற்கு தேதி குறித்தார்கள். ஆனால் நிச்சயதார்த்தத்தோடு திருமணம் நின்றதாக தகவல் வெளியானது. விஷாலுக்கும், அனிஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் நின்றதாகக் கூறப்பட்டது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜி.கே. ரெட்டி பின்னர் தெரிவித்தார்.

அனிஷா ரெட்டி
புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் தனது திருமணம் நடக்க வேண்டும் என்பதில் விஷால் உறுதியாக இருப்பதாகவும், அதனால் தான் திருமணத்தில் தாமதம் ஏற்படுகிறது என்றும், நடிகர் சங்க பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் உடனே திருமணத்தை நடத்த முடியவில்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.
ஆனால் விஷாலும், அனிஷாவும் இது குறித்து எதுவும் பேசவில்லை. ஒருவர் மீது மற்றொருவர் புகார் தெரிவிக்கவும் இல்லை. அதன் பின்னர் தான் விஷாலுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கினார் அனிஷா. இதனால் அவர்கள் பிரிந்து விட்டது உண்மை தான் என உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர் அனிஷாவின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடக்கும் என்றும் தகவல்கள் பரவின. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிஷா, தனது பயண அனுபவங்களை புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொள்கிறார். சமீபத்தில் தான் விடுமுறைக்கு ட்ரிப் சென்றபோது, அங்கு பிகினி உடையில் எடுத்துக் கொண்ட ஒரு படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்