ஐயப்பனும் கோஷியும் படத்தில் ஐயப்பனாக வந்து மிரட்டிய பிஜு மேனனுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.
பிரித்வி ராஜ், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடித்து சச்சிதானந்தனால் இயக்கப்பட்ட ஐய்யப்பனும் கோஷியும் மலையாளத்தில் ஹிட் அடித்ததோடு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களிடமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
முன்னாள் இராணுவ வீரரான பணக்கார கோஷிக்கும், சப் இன்ஸ்பெக்டரான நேர்மையான ஐய்யப்பனுக்கும் இடையேயான பகையே ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தின் கதையின் ஒன்லைன்.
இப்படத்தில் பணி ஓய்வை நெருங்கிக்கொண்டிருக்கும் நேர்மையான சப் இன்ஸ்பெக்டராக தன் உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாத ஒரு கதாபாத்திரத்தில் பிஜு மேனன் நடித்திருந்தார். செல்வாக்கான, பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான பிருத்வி ராஜ்ஜுக்கும் இவருக்கும் இடையே நடக்கும் சண்டையால் ஐயப்பன் தன் வேலையை இழக்கும் நிலை ஏற்படும்.
இதனால் அவர் அரசாங்கம், சட்டம், குடும்பம் என யாருக்கும் அடங்காத அசுரனாகப் படத்தில் பாதியில் மாறுவார் பிஜு மேனன். இப்படி இரண்டு விதமான குணம் கொண்ட ஐயப்பன் கதாபாத்திரத்தை மிக லாவகமாகக் கையாண்டிருப்பார் பிஜு மேனன்.
படம் வெளியாகி மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. அதே போல்
அமேசான் பிரைமில் வெளி வந்த இப்படத்தை பெரும்பாலான தமிழ் ரசிகர்கள் கண்டு களித்தனர். அந்த சமயத்திலேயே பிஜு மேனனுக்கு தேசிய விருதுக்கு வாய்ப்பு இருப்பதாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஸ்டண்ட் அமைப்பு, சிறந்த பின்னணி பாடகி உள்ளிட்ட விருதுகளை அப்படம் வென்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cinema, National Film Awards