பிகில் : இணையத்தில் வெளியான விஜய்யின் மாஸ் சீன்!

news18
Updated: August 4, 2019, 5:32 PM IST
பிகில் : இணையத்தில் வெளியான விஜய்யின் மாஸ் சீன்!
பிகில் பட போஸ்டர்
news18
Updated: August 4, 2019, 5:32 PM IST
பிகில் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து பிகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விஜய் ‘பிகில்’ படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார்.

சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.




Loading...





அதில் விஜய் ஸ்டைலாக பைக் ஓட்டி வருகிறார். இந்தக் காட்சி சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தளபதி 28 - விஜய்க்கு ஹிட் கொடுத்த 28 இயக்குநர்கள்!

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...