அஜித்தை பாராட்டிய போலீஸ்... சர்ச்சையில் சிக்கிய விஜய்...!

news18
Updated: August 5, 2019, 12:20 PM IST
அஜித்தை பாராட்டிய போலீஸ்... சர்ச்சையில் சிக்கிய விஜய்...!
நடிகர்கள் அஜித், விஜய்
news18
Updated: August 5, 2019, 12:20 PM IST
நடிகர் விஜய் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

தெறி, மெர்சல் படங்களை அடுத்து அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறர் விஜய். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதை கண்டுகளிக்கும் ரசிகர்கள் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.


அதன்படி நேற்று இணையத்தில் கசிந்த ஒரு வீடியோவில், நடிகர் விஜய் பைக்கில் செல்வது இடம்பெற்றிருந்தது. சில வினாடிகளே உள்ள அந்த வீடியோவில் பைக்கில் சென்றபடி ரசிகர்களை பார்த்து கை அசைக்கும் விஜய் ஹெல்மெட் அணியாமல் செல்வதும் பதிவாகியிருந்தது.நீதிமன்ற உத்தரவின்படி இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஜனவரி மாதம் வெளியான விஸ்வாசம் படக் காட்சியில் அஜித், நயன்தாரா இருவரும் ஹெல்மெட் அணிந்து பயணித்தனர். அதற்கு காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.வீடியோ பார்க்க: தல VS தளபதி! திரைக்குள் நிகழ்ந்த போர்

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...