பிகில் படத்துக்காக முதல் விருது... நடிகர் விஜய்க்கு நன்றி...! உருகிய பிரபலம்

விஜய்யின் பிறந்தநாளன்று பிகில் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர்கள் வடிவமைத்தவர் கோபி பிரசன்னா.

news18
Updated: August 24, 2019, 10:28 AM IST
பிகில் படத்துக்காக முதல் விருது... நடிகர் விஜய்க்கு நன்றி...! உருகிய பிரபலம்
பிகில்
news18
Updated: August 24, 2019, 10:28 AM IST
பிகில் படத்தில் டிசைனராக பணியாற்றி வரும் கோபி பிரசன்னா நடிகர் விஜய்-க்கு நன்றி தெரிவித்துள்ளார். 

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளன்று பிகில் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் போஸ்டர்களை வடிவமைத்தவர் கோபி பிரசன்னா.


படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் நடைபெற்று வரும் நிலையில் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு பிகில் என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய். அதற்கான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.இந்நிலையில் கோபி பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் மோதிர புகைப்படத்தை வெளியிட்டு, ‘டிசைனராக எனக்கு கிடைத்த முதல் விருது. நடிகர் விஜய்க்கு நன்றி’ என்று பதிவிட்டுள்ளார்

Loading...
Also watch

First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...