பிகில் பட டீசர் வெளியீட்டு தேதி இதுதான்! - கலக்கல் அப்டேட்

பிகில் பட டீசர் வெளியீட்டு தேதி இதுதான்! - கலக்கல் அப்டேட்
பிகில் - வெறித்தனம்
  • News18
  • Last Updated: September 5, 2019, 12:27 PM IST
  • Share this:
பிகில் படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிகில். முழுக்க முழுக்க பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்தப் படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


இதில் விஜய் பாடிய வெறித்தனம் யூடியூபில் பாடல் 1 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முழுக்க படம் குறித்த அப்டேட்ஸ் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்களை வரும் 19-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...

சங்கத் தமிழனுக்கு குட் பை சொன்ன விஜய் சேதுபதி

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சங்கத்தமிழன். ராஷி கண்ணா நிவேதாபெத்துராஜ் ஆகியோர் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளனர். படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்திருப்பதாக இயக்குநர் விஜய் சந்தர் அறிவித்துள்ளார்.தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் முன்கூட்டியே அக்டோபர் 4-ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனின் துவங்கியது தனுஷ் படம்‘பேட்ட’ படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் தனுஷின் நாற்பதாவது திரைப்படம் லண்டனில் துவங்கி உள்ளது. அசுரன் திரைப்படத்தில் நடித்து முடித்த கையோடு இந்தத் திரைப்படத்தில் பங்கேற்பதற்காக லண்டன் புறப்பட்டு உள்ள தனுஷ் தொடர்ந்து 45 நாட்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இதையும் படிங்க: Exclusive: விஜய்டிவி மீது புகாரளித்தது ஏன்? மதுமிதா விளக்கம்

சத்யராஜ் - சசிகுமார் அமைக்கும் புதிய கூட்டணி

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் சீமராஜா ஆகிய திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் சசிகுமார் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். எஞ்சிய நடிகர்களுக்கான தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வீடியோ பார்க்க: வலுக்கும் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற மோதல்!

First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...