‘பிகில் போடலாமா’... சிங்கப் பெண்ணே பாடல் மகள்களுக்கு சமர்ப்பணம்! - படக்குழு அறிவிப்பு

news18
Updated: July 20, 2019, 7:27 PM IST
‘பிகில் போடலாமா’... சிங்கப் பெண்ணே பாடல் மகள்களுக்கு சமர்ப்பணம்! - படக்குழு அறிவிப்பு
பிகில் பட போஸ்டர்
news18
Updated: July 20, 2019, 7:27 PM IST
பிகில் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் காலபந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.  விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் சிங்கப் பெண்ணே பாடல் 23-ம் தேதி வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.
Loading...இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், ‘இந்தப் பாடல் நாட்டின் அனைத்து மகள்களுக்கும் சமர்ப்பணம்’ என்றும் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க: வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்!

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...