பிகில் பட போஸ்டரை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட இறைச்சி வியாபாரிகள்!

பிகில் பட போஸ்டரை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட இறைச்சி வியாபாரிகள்!
இறைச்சிக் கடை உரிமையாளர்கள்
  • News18
  • Last Updated: September 23, 2019, 1:07 PM IST
  • Share this:
பிகில் திரைப்பட போஸ்டர் தங்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி இறைச்சி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய், தந்தை - மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது விஜய் பேசிய பேச்சுக்கும் அதிமுக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.


Also Read: விஜய் பற்றி நான் பேசியதை கட் பண்ணிட்டாங்க... பிகில் வில்லன் ஆதங்கம்...!

இந்நிலையில், இறைச்சி வெட்டும் முட்டி (கட்டை) மீது செருப்புக் கால் வைத்து விஜய் அமர்ந்திருக்கும் பிகில் பட போஸ்டர் தங்களை இழிவுபடுத்துவதாகக் கூறி கறிக்கடை உரிமையாளர்கள் கோபால் என்பவரது தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Loading...

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து மீன் வியாபாரிகள், இதர அனைத்து இறைச்சி வியாபாரிகளும் அதிகாலை தொட்டு வணங்கி தொழில் செய்யும் முட்டி, கத்தி மீது செருப்புக்கால் வைத்து போஸ்டர் வெளியிட்டு மொத்த வியாபாரிகளை செறுப்பால் அடித்த உணர்வை ஏற்படுத்து விட்டீர்கள் அந்தக் காட்சியோடு படம் வெளிவந்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு வியாபாரிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும். இதைச் சுட்டிக்காட்டி ஏஜிஎஸ் நிறுவனத்துக்கும், இயக்குநர் அட்லீக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Also Read: டிக்கெட்டுகளை கிழித்து விஜய் ரசிகர்கள் வேதனை!


ஆகவே இந்தியாவில் உள்ள மொத்த இறைச்சி வியாபாரிகளையும் கொச்சைப்படுத்தும் பிகில் திரைப்படத்தில் அந்தக் காட்சி சம்பந்தப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு படத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாறு மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் துணை மிதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

மனு அளிக்க வந்த கறிக்கடை உரிமையாளர்கள் பிகில் பட போஸ்டரை கிழித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.First published: September 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...