பிகில் ட்ரெய்லர்: 1 மணி நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ்... வியந்து பாராட்டிய விஸ்வாசம் பட நிறுவனம்!

news18
Updated: October 12, 2019, 8:06 PM IST
பிகில் ட்ரெய்லர்: 1 மணி நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸ்... வியந்து பாராட்டிய விஸ்வாசம் பட நிறுவனம்!
பிகில் திரைப்படத்தில் விஜய்
news18
Updated: October 12, 2019, 8:06 PM IST
பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லரை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வியந்து பாராட்டியுள்ளது!

தெறி, மெர்சல் படங்களை அடுத்து அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விவேக், கதிர், ஜாக்கி ஷெராஃப் டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான பிகில் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் படக்குழு தற்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.


2 நிமிடம் 41 வினாடிகள் நீளம் கொண்ட ட்ரெய்லரில் விஜய்யின் பஞ்ச் வசனங்களும், அதிரடியான சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ட்ரெய்லர் வெளியான 1 மணி நேரத்தில் யூடியூபில் 1 மில்லியன் லைக்ஸ்களை குவித்திருப்பதோடு, ட்விட்டரிலும் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

திரைத்துறையினர் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பிகில் பட ட்ரெய்லரை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில் விஸ்வாசம் படத்தை வெளியிடட் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிகில் திரைப்பட ட்ரெய்லரை வியந்து பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளது.அந்த பதிவில், “மிகவும் சிறப்பாக இருக்கிறது பிகில் ட்ரெய்லர். நடிகர் விஜய் எப்போதுமே அபாரமானவர். வெறித்தனம். படத்தை தமிழகத்தில் வெளியிடுன் ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்கு வாழ்த்துகள்” என்று கூறப்பட்டுள்ளது.வீடியோ பார்க்க: என் நெஞ்சில் குடியிருக்கும்... நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சுகள்

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...